search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா வெஸ்ட் இண்டீஸ்"

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் 2-வது ஒரு நாள் போட்டி இந்தூரில் இருந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்பட்டு இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. #BCCI #IndiavsWestIndies #Visakhapatnam
    விசாகப்பட்டினம்:

    இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதன் 2-வது ஒரு நாள் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வருகிற 24-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இலவச டிக்கெட்டுகள் விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும், மத்திய பிரதேச மாநில கிரிக்கெட் சங்கத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.



     கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைப்படி மைதானத்தின் ஒவ்வொரு பிரிவிலும் 10 சதவீத டிக்கெட்டுகள் மட்டுமே சம்பந்தப்பட்ட மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு வழங்க முடியும். ஆனால் இது போதாது என்று வாதிட்ட மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கம், கூடுதலாக டிக்கெட்டுகள் தராவிட்டால் போட்டியை நடத்தமாட்டோம் என்று திட்டவட்டமாக கூறியது.

    இந்த நிலையில் இந்தூரில் நடக்க இருந்த 2-வது ஒரு நாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்பட்டு இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #BCCI #IndiavsWestIndies #Visakhapatnam 
    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை தொடங்குகிறது. #INDvWI #RajkotTest
    ராஜ்கோட்:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை (4-ந் தேதி) தொடங்குகிறது.

    விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்து பயணத்தில் 1-4 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது. இதனால் வீரர்கள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். தற்போது சொந்த மண்ணில் விளையாடுவதால் வெஸ்ட் இண்டீசை எளிதில் வீழ்த்தும் வேட்கையில் இருக்கிறது.

    இந்திய அணி 2013-ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் கைப்பற்றி சாதனை படைத்தது. 2012-ம் ஆண்டு நவம்பர்- டிசம்பர் மாதங்கல் இங்கிலாந்திடம் 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது.

    அதன் பிறகு சொந்த மண்ணில் நடந்த அனைத்து டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி முத்திரை பதித்து இருந்தது. தற்போது வெஸ்ட் இண்டீசுக்கு எதிராகவும் வென்று சொந்த மண்ணில் 10-வது டெஸ்ட் தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. வெஸ்ட் இன்டீசை 2016-ல் அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இருந்ததால் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது.

    ஆசிய கோப்பை போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்ட கேப்டன் விராட் கோலி அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளார். தொடக்க வீரராக யார் களம் இறங்குவார் என்பதே அனைவரது எதிபார்ப்பாக இருக்கிறது. வழக்கமாக விளையாடும் தவான், முரளி விஜய் அணியில் இருந்து கழற்றவிட்டப்பட்டு உள்ளனர்.


    இதனால் லோகேஷ் ராகுலுடன் தொடக்க வீரராக விளையாட வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என்பதே கேள்வியாக இருக்கிறது. பிரித்வி ஷா, மயாங்க் அகர்வால் ஆகியோரில் ஒருவர் தொடக்க வீரராக ஆடுவார்கள்.

    பேட்டிங்கில் கேப்டன் கோலி, புஜாரா, ரகானே ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இதே போல ரிஷப் பந்தும் அணிக்கு வலுசேர்ப்பார். மிடில் ஆர்டரில் ஹனுமா விஹாரிக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுகிறது.

    சுழற்பந்தில் அஸ்வின்- ஜடேஜா கூட்டணி சொந்த மண்ணில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவார்கள். வேகப்பந்தில் புதுமுக வீரர் முகமது சிராஜுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இடம் பெற்றால் உமேஷ் யாதவ், முகமது‌ ஷமி ஆகியோரில் ஒருவர் நீக்கப்படலாம்.

    டெஸ்டில் நம்பர் 1 அணியாக திகழும் இந்தியா அதை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள இந்த டெஸ்ட் தொடரை சரியாக பயன்படுத்திக் கொள்ளும்.


    ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி சொந்த மண்ணில் இலங்கையுடன் ‘டிரா’ செய்தது. அதை தொடர்ந்து வங்காளதேசத்தை 2-0 என்ற கணக்கில் வென்று இருந்தது. இதனால் அந்த அணி மிகுந்த நம்பிக்கையுடன் இந்தியாவை எதிர்கொள்ளும்.

    வேகப்பந்து வீரர் கேமாரோச் சொந்த காரணத்துக்காக நாடு திரும்பி உள்ளார். அவர் இல்லாதது அந்த அணிக்கு பாதிப்பே. புதுமுக வீரர்களை கொண்ட வெஸ்ட் இன்டீஸ் இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க கடுமையாக போராட வேண்டும்.

    நாளைய டெஸ்ட் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. #INDvWI #RajkotTest #ViratKohli #JasonHolder
    ×